சுடச்சுட

  

  ரூ.15 கோடி சொத்தை கணக்கில் காட்டாத தேஜ் பிரதாப்: பாஜக குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 15th April 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தேஜ் பிரதாப் ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை வேட்புமனுவின்போது கணக்கில் காட்டாமல் மறைத்துட்டதாக மாநில பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
  பாட்னாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அவர் மேலும் கூறியதாவது:
  பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், மாநில அமைச்சருமான தேஜ் பிரதாப் படந்த கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.53.34 லட்சம் கொடுத்து ஒளரங்காபாத் மாவட்டத்தில் நிலம் வாங்கியுள்ளார்.
  2015-ஆம் ஆண்டில் பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது, இந்த சொத்தை அவர் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இப்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.15 கோடியாகும். இதனை அவர் மறைத்தது ஏன்?
  இதனை நாங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  ரூ.53.34 லட்சத்துக்கு சொத்து வாங்கியபோது, தேஜ் பிரதாப்பின் வயது 20-தான். அப்போது அவருக்கு அவ்வளவு பெரிய தொகை எப்படி கிடைத்தது?
  தனது அமைச்சரவையில் இருந்து தேஜ் பிரதாப்பை நீக்க முதல்வர் நிதீஷுக்கு தைரியம் இருக்கிறதா? அல்லது தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த விவகாரத்தில் அவர் அமைதிகாக்கப் போகிறாரா? என்று சுஷில் குமார் மோடி கேள்வி எழுப்பினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai