சுடச்சுட

  

  மத்திய அரசிடம் இருந்து மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் உத்தரப் பிரதேச அரசு வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.
  லக்னெளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பியூஷ் கோயல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  பிறகு செய்தியாளர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
  அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் மின்விநியோகம் என்பதுதான் மாநில அரசின் இலக்காகும். அதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.
  அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
  "அனைவருக்கும் மின்சாரம்' என்பது மத்திய அரசின் திட்டமாகும். இதற்கு முந்தைய உத்தரப் பிரதேச அரசு மாநில மக்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படவில்லை என்றார்.
  முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புறங்களில் 18 மணி நேரமும், வட்டத் தலைநகரங்கள், புந்தேல்கண்ட் பகுதியில் 20 மணி நேரமும், மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேரம் மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு முடிவெடுத்தது.
  இதுதவிர 2019-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி இருப்பதை உறுதிசெய்யவதற்காகவும் மத்திய அரசுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின்போது பாஜக இது தொடர்பாக வாக்குறுதி அளித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai