சுடச்சுட

  

  8-ஆம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

  By DIN  |   Published on : 15th April 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல
  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  தில்லி பாஜக தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வனி குமார் உபாத்யாய தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களின் கோரிக்கையை ஏற்றே கடந்த 1968-ஆம் ஆண்டு மும்மொழிக் கொள்கைக் கொண்டு வரப்பட்டது.
  அந்தக் கொள்கையின்படி, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலம், வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழி ஆகிய மூன்று மொழிகளும், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழி ஆகிய மூன்று மொழிகளும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தச் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் இதுவரை அமல்படுத்தவில்லை.
  பிராந்திய மொழிகளில் பயின்ற நீதிபதிகளும், அரசு உயரதிகாரிகளும், ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் பணிபுரியும்போது ஹிந்தியை எழுதுவதற்கும், பேசுவதற்கும் சிரமப்படுகிறார்கள்.
  இதுபோன்ற பிரச்னைகள் எளிதில் தீர்க்கப்பட வேண்டுமெனில், அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஹிந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். இதனால், இந்திய குடிமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்புகொள்ள முடியும்.
  மேலும், சகோதரத்துவம், ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai