சுடச்சுட

  

  அகதிகள் நுழையத் தடை விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி

  By DIN  |   Published on : 16th April 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kail

  உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற தேவ் சம்ஸ்கிருதி பல்கலைக்கழகத்தின் 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாநில ஆளுநர் கிருஷ்ணகாந்த் பால் (முதல் வரிசையில் நடுவில்), நோபல் பரிசு

  சில நாடுகளில் இருந்து வரும் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை நோபல் பரிசு வென்ற குழந்தைகள் நல ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். உலகின் எந்தப் பகுதியிலும் குழந்தைகளுக்கு இதயங்களும், கதவுகளும், எல்லைகளும் திறந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
  உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ள தேவ் சம்ஸ்கிரிதி பல்கலைக்கழகத்தின் 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற கைலாஷ் சத்யார்த்தி வந்திருந்தார். அங்கு அவர், பிடிஐ செய்தியாளருக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:
  ஜெர்மனி, துருக்கி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் குழந்தைகளின் நிலைமையை நான் கண்டுள்ளேன். தங்கள் நாட்டில் நிலவும் சமூக-அரசியல் சூழ்நிலைகளுக்கும் குழந்தைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அந்தச் சூழ்நிலைகளால் அவர்கள் அகதிகளாக்கப்படுகிறார்கள்.
  சூழ்நிலைக் கைதிகளான அவர்களுக்கு பாசத்துடன் நடத்தப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும் உண்டு. உலகெங்கிலும் குழந்தைகளுக்காக இதயங்கள், கதவுகள், எல்லைகள் ஆகியவை எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கருதுகிறேன். இந்த விஷயத்தில் எந்தப் பாரபட்சமும் காட்டப்படக் கூடாது.
  அகதிகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்த நகாலகட்டத்தில் நான் இந்தக் கருத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினேன். இதே கருத்தையே அமெரிக்காவை ஆட்சி புரியும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துக்கும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
  தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது என்ற டிரம்ப் அரசின் முடிவு கவலையளிக்கிறது. இந்த முடிவானது சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு குடியேறும் விவகாரத்தில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். எனவே, சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படாத வகையிலும், அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் விதத்திலும் விரிவான செயல்திட்டம் ஒன்றை டிரம்ப் அரசு வகுக்க வேண்டும்.
  ஐ.நா. தகவலின்படி, உலகம் முழுவதிலும் கடந்த 2000-ஆம் ஆண்டில் 26 கோடியாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 16.8 கோடியாகக் குறைந்துள்ளது. "குழந்தைகளைப் பாதுகாப்போம்' இயக்கத்தை நான் கடந்த 1980-இல் தொடங்கினேன். அந்த இயக்கமானது, உலகில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறையை ஒட்டுமொத்தமாக அகற்றும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai