சுடச்சுட

  

  இந்தியாவின் இளம் எம்.பி. துஷ்யந்த் சௌதாலாவுக்கு நாளை திருமணம்

  By DIN  |   Published on : 16th April 2017 11:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dushyant

  நாட்டில் மிக இளம் வயதிலேயே மக்களவை உறுப்பினரானவரும், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் பேரனுமான துஷ்யந்த் சௌதாலாவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.18) திருமணம் நடைபெற உள்ளது.
  துஷ்யந்த் சௌதாலா தனது 26-ஆவது வயதிலேயே ஹிஸார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  இதன்மூலம், மிக இளம் வயதிலேயே மக்களவை உறுப்பினரானவர் என்ற பெருமையைப் பெற்றார்.
  இவரது தந்தையும், முன்னாள் எம்எல்ஏவுமான அஜய் சிங் சௌதாலா, தாத்தா ஓம்பிரகாஷ் சௌதாலா ஆகியோர் அரசு ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதில் ஊழல் செய்ததாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றனர்.
  துஷ்யந்த்தின் திருமணத்தில் பங்கேற்பதற்காக தற்போது இருவரும் பரோலில் வெளிவந்துள்ளனர்.
  சௌதாலா குடும்பம் மொத்தமும் ஹரியாணாவின் சிர்ஸா நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்வுக்காக ஒன்று கூடியிருக்கின்றனர். ஐபிஎஸ் அதிகாரியும், ஹரியாணா மாநில காவல் துறை ஐஜி பரம்ஜித் சிங் ஆலாவத்தின் மகள் மேக்னாவை துஷ்யந்த் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai