சுடச்சுட

  
  pranab

  ஈஸ்டர் திருநாளையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறப்புமிக்க இந்நாளில் சமூகத்தில் நிலவி வரும் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை வேரறுக்க அனைவரும் ஒன்று திரள்வோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இந்த ஆண்டு ஈஸ்டர் திருநாளில் அனைவரது வாழ்விலும் புத்தாக்கமும், உத்வேகமும் மலரட்டும்.
  ஏசு கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் அன்பு, உண்மை, கருணை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடிப்படையில் நமது வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்ள வழிகோலுகின்றன.
  சமூகத்தில் புரையோடியிருக்கும் வெறுப்புணர்வையும், வன்முறையையும் வேரறுக்க அனைவரும் ஓரணியாகத் திரள வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும், நலிந்த மக்களுக்கும் சேவையாற்றுவதற்காக வாழ்வை அர்ப்பணிக்க அனைவரும் முன்வர வேண்டும்.
  நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai