சுடச்சுட

  

  உ.பி.யில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: விசாரணைக்கு உத்தரவு

  By DIN  |   Published on : 16th April 2017 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  train-accident

  உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் அருகே தடம்புரண்டு கிடக்கும் ராஜ்ய ராணி விரைவு ரயிலின் பெட்டிகள்.

  உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் அருகே பயணிகள் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
  லக்னௌ-மீரட் இடையேயான ராஜ்ய ராணி விரைவு ரயில், ராம்பூர் அருகே சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நேரிடவில்லை. பயணிகள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
  எனினும், ராம்பூர் காவல்துறை தரப்பில், ரயில் விபத்தில் பயணிகள் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், "தனிப்பட்ட முறையில் நிலவரத்தை கண்காணித்து வருகிறேன்; மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.
  படுகாயமடைந்த பயணிகள் 2 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ராஜ்ய ராணி ரயில் தடம்புரண்டதையடுத்து, அந்த ரயிலில் பயணித்தவர்கள் தொடர்ந்து பயணம் செய்வதற்கு ரயில்வே சார்பில் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதும், விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் 2 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் உடனடியாக வழங்கும்படி அமைச்சர் பால்தேவ் ஒலாகாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
  சதிச் செயல் காரணமா?: இந்நிலையில், ரயில் தடம்புரண்ட இடத்திலுள்ள தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 3 கட்டைகளை காணாமல் போயிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் தடம்புரண்டதற்கு சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாகவும் ரயில்வேத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai