சுடச்சுட

  

  உ.பி.: முதல்வரை ஆதரித்து சர்ச்சைக்குரிய விளம்பரப் பலகைகள்

  By DIN  |   Published on : 16th April 2017 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "யோகி யோகி என்று முழங்காதவர்கள், உத்தரப் பிரதேசத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று அந்த மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விளம்பரப் பலகைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் "ஹிந்து யுவ வாஹினி' அமைப்பின் மீரட் மாவட்டக் கிளையின் பெயரில், மீரட் நகர் முழுவதும் ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
  அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் இல்லங்கள் அருகிலும் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பரப் பலகைகளில், பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரின் படங்களுடன் மீரட் மாவட்ட ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் தலைவர் நீரஜ் சர்மாவின் படமும் இடம்பெற்றுள்ளது.
  அந்த விளம்பரப் பலகைகளில், "உத்தரப் பிரதேசத்தில் வாழ விரும்புவோர், யோகி யோகி என்று முழக்கமிட வேண்டும்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
  இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திர கௌர் கூறுகையில், "விளம்பரப் பலகைகள் குறித்து விசாரித்து, விரிவான அறிக்கை அளிக்கும்படி மாவட்ட காவல்துறை உளவுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அறிக்கை கிடைத்தப் பிறகு, வழக்குப் பதிவு செய்து, நடவடிகை எடுக்கப்படும்' என்றார்.
  இதுகுறித்து, ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் மாநில உறுப்பினர் நாகேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே, மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து நீரஜ் சர்மா நீக்கப்பட்டுவிட்டார்.
  இதனால், அமைப்பின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai