சுடச்சுட

  
  venkaiah naidu

  வரும் 2019ஆம் ஆண்டு ஒடிஸாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்தார் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சனிக்கிழமை புவனேசுவரம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  ஏழை மக்களுக்காக நலத் திட்டங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுத்தி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
  ஒடிஸாவில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. வரும் 2019-ஆம் ஆண்டு மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் பெருபான்மை பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கும்.
  மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் அனைத்தும் அடிமட்ட அளவில் ஒடிஸா மக்களுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வதற்கு இந்த தேசிய செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் அளிக்கும்.
  மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள், ஏழைகளின் மேம்பாட்டுக்கான கொள்கைகளை செயல்படுத்திப் பார்க்கும் சோதனைக் கூடமாக ஒடிஸா மாநிலம் மாறவிருக்கிறது என்று பல்வேறு பாஜக தலைவர்கள் ஏற்கெனவே கூறிவிட்டனர். அப்படி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் ஒடிஸாவுக்கு மிகப் பெரிய அளவில் பலன் கிட்டும். தொலைநோக்குப் பார்வை, தீர்க்கமான கொள்கைகள் என்பது எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. அவர்களிடம் எவ்வித நல்ல நோக்கமும் இல்லை. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிட்டு பாஜக 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
  மோடி தலைமையின் கீழ் பாஜக பெரும் பலத்துடன் வளர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாகவே வந்துள்ளன என்றார் வெங்கய்ய நாயுடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai