சுடச்சுட

  

  காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் மீது குண்டுவீச்சு

  By DIN  |   Published on : 16th April 2017 10:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீநகர்: ஶ்ரீநகர் ரெய்னாவரி பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஶ்ரீநகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வன்முறை வெடித்தது. தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எட்டு பேர் உயிரிழந்தனர். அன்று முதல் பாதுகாப்புப் படையினர் - போராட்டக்காரர்கள் இடையே தொடர்ந்து சண்டைகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

  இந்நிலையில், ஶ்ரீநகரில் உள்ள ரெய்னாவரி பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது.  இந்த குண்டுவீச்சில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. பாதுகாப்பு வீரர்கள் சென்ற வாகனத்தின் சிறியளவில் சேதமடைவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவால், ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai