சுடச்சுட

    
    jammu-kashmi

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா நகரில் இளைஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்தனர்.
    இதுதொடர்பாக, போலீஸ் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
    புல்வாமா நகரில் உள்ள அரசுக் கல்லூரி அருகே காவல் துறை சோதனை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் குழுவினர் சனிக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கற்களை வீசினர். அதையடுத்து, கூட்டத்தைக் கலைப்பதற்காக, மிதமான தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர் என்றார் அவர்.
    இதனிடையே, போராட்டக்காரர்களை எச்சரிப்பதற்காக, போலீஸார் வானத்தை நோக்கி சுட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai