சுடச்சுட

  

  காஷ்மீர் இளைஞர்கள் தாக்கப்பட்ட விடியோ: நடவடிக்கை எடுப்பதாக ராணுவம் உறுதி

  By DIN  |   Published on : 16th April 2017 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு - காஷ்மீரில் இளைஞர்களை ராணுவத்தினர் அடித்துத் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் அடங்கிய விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை உறுதியளித்துள்ளது.
  காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் முன்பக்கத்தில் இளைஞர் ஒருவரைக் கட்டி வைத்து வீதிகளில் வலம் வருவதைப் போன்ற காட்சிகள் அடங்கிய விடியோ வெள்ளிக்கிழமை வெளியானது. இது அந்த மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது அடங்குவதற்குள் மேலும் இரு விடியோக்கள் சனிக்கிழமை வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கின.
  நான்கு ராணுவ வீரர்கள் ஓர் இளைஞரை பிரம்பால் கண்மூடித்தனமாகத் தாக்குவதுபோன்ற காட்சிகள் ஒரு விடியோவில் இடம்பெற்றிருந்தன. மற்றொன்றில், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சில இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் அடித்துத் துன்புறுத்தி பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புமாறு நிர்பந்திப்பது போன்ற காட்சிகள் இருந்தன.
  இந்த விடியோக்கள் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில், இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா, ஊடகங்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  அந்த விடியோக்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் உண்மை என நிரூபணமாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai