சுடச்சுட

  

  காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர்}ராணுவ தளபதி ஆலோசனை

  By DIN  |   Published on : 16th April 2017 11:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  VIPINRAWAT1

  காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும், ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத்தும் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீரில் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வரும் போராட்டக்காரர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிவைத்து ராணுவத்தினர் கொண்டு செல்வது போன்ற விடியோ அண்மையில் வெளியானது. இந்த விடியோவால், காஷ்மீர் முழுவதும் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
  இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோரை ராணுவத் தலைமை தளபதி ராவத் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
  இச்சந்திப்பின்போது, விபின் ராவத்திடம் இந்த விவகாரத்தை மெஹபூபா முஃப்தி எழுப்பினார். இதையடுத்து, இளைஞரை கயிற்றால் கட்டி கொண்டு சென்ற ராணுவ வீரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராவத் உறுதியளித்தார்.
  இதைத் தொடர்ந்து, தில்லியில் தோவாலை அவரது இல்லத்துக்குச் சென்று ராவத் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக தோவாலிடம் ராவத் விரிவாக எடுத்துரைத்ததாக மத்திய அரசு வட்
  டாரத் தகவல்கள் தெரிவித்தன.
  புதிய தகவல்கள்: இதனிடையே, ஜீப்பின் முன்பகுதியில் இளைஞர் கயிற்றால் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
  காண்டிபோராவில் உள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய-திபெத் எல்லை காவல்படை மற்றும் உள்ளூர் போலீஸாரிடம் இருந்து ராணுவத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது போராட்ட கும்பல் தங்களை கத்தியால் குத்த வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு சென்ற ராணுவ வீரர்கள், போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும், 36 வயதான பரூக் தார் என்பவரை பிடித்து ஜீப்பின் முன்பகுதியில் கட்டி கொண்டு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai