சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் தங்கள் மீது கற்களை வீசித் தாக்கியவர்கள் மீது எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர் பலியானார்.
    ஸ்ரீநகரின் பட்மாலூ பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினரை நோக்கி சனிக்கிழமை மாலையில் இளைஞர்கள் சிலர் திடீரென கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், சஜ்ஜத் அகமது என்ற இளைஞர் உயிரிழந்தார். 23 வயதாகும் சஜ்ஜத், பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
    அவரது இறப்பையடுத்து, அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai