சுடச்சுட

  
  modi

  குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறார்.
  இதுதொடர்பாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
  குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சூரத் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் வந்து இறங்குகிறார். பின்னர், அங்கிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ள விருந்தினர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக அவர் செல்கிறார். இரவு, விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிரண் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பிரதமர் திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
  பின்னர் வைரத்தை பட்டை தீட்டும் ஆலை திறப்பு விழா, கால்நடைத் தீவன ஆலை, ஐஸ்கிரீம் ஆலை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். பின்னர், தாத்ரா - நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத் தலைநகர் சில்வாஸாவில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர், அவர் சௌராஷ்டிரம் பகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  இந்த ஆண்டில், பிரதமர் மோடி குஜராத்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, அவர் கடந்த மார்ச் 8-ஆம் தேதி காந்திநகருக்கு பயணம் மேற்கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai