சுடச்சுட

  

  கேரளத்தில் அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தவிர்க்கவும்

  By DIN  |   Published on : 16th April 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு எதிரான விமர்சனங்களை பகிரங்கமாகக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
  கடந்த சில தினங்களுக்கு முன், கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், நீதி கேட்டு காவல் துறை தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அந்த மாணவரின் தாயாரை போலீஸார் தடுத்து நிறுத்தியதுடன், அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
  இந்தச் சம்பவம் தொடர்பாக, மாநில அரசைக் கடுமையாக விமர்சித்து சிபிஐ மாநிலச் செயலர் கனம் ராஜேந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.
  இந்நிலையில், இவரது விமர்சனங்களுக்கு பதிலளிக்குமாறு கண்ணனூரில் சனிக்கிழமை பேட்டியளித்த சிபிஎம் மாநிலச் செயலர் கொடியேறி பாலகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசியதாவது:
  அரசின் கொள்கை விஷயங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறோம். அதேநேரத்தில், அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பகிரங்கமாகக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
  அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கும்போது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  இவ்வாறு தெரிவிக்கப்படும் விமர்சனங்கள், அரசியல் எதிரிகளுக்கு ஆதாயமாகிவிடும். எனவே, அதுபோன்ற சூழலை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உருவாக்கக் கூடாது.
  ஒவ்வொரு விவகாரத்திலும், வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கும், வெவ்வேறு கருத்துகளும், பார்வைகளும் இருப்பது இயற்கையானதுதான். ஆனால், அரசுக்கு எதிரான கருத்துகளை பகிரங்கமாக முன்வைப்பது, ஆட்சி நிர்வாகத்தை பலவீனப்படுத்திவிடும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai