சுடச்சுட

  

  கேரளம்: இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் அரசியல் வன்முறை அதிகரிப்பு

  By DIN  |   Published on : 16th April 2017 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசியல் வன்முறைகள் அதிகரித்துவிட்டன என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
  இதுதொடர்பாக, அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலர் கிருஷ்ண கோபால், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  கேரளத்தில் கடந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல் வன்முறைகளில் 400-க்கும் அதிகமான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், கம்யூனிஸ்ட் தொண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
  குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 11 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  மாநிலத்தில் தற்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு இயல்பு நிலையைக் கொண்டுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க
  வேண்டும்.
  வன்முறை மீதோ, எதிர் வன்முறை மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. நாங்கள் அரசமைப்புச் சட்டப்படி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயலுகிறோம். கேளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீதான தாக்குதல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்று வருகிறோம்.
  கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் தொண்டர்கள் வன்முறையைக் கைவிட்டு சித்தாந்த ரீதியிலான விவாதத்தைத் தொடங்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.
  மேலும், கேரளத்தில் பன்னெடுங்காலமாக கம்யூனிஸ்ட்- ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு
  இடையே நீடிக்கும் மோதல்கள் குறித்து விசாரிப்பதற்காக, அங்கு அனைத்துக் கட்சிக் குழு செல்ல வேண்டும்.
  கேரள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
  இந்தச் சந்திப்பின்போது கேரள வன்முறையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai