சுடச்சுட

  
  sanjay_dutt

  திரைபடத் தயாரிப்பாளரை மிரட்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஷகீல் நூரானி, மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2002-ஆம் ஆண்டில் நான் தயாரித்த படமொன்றில் நடிப்பதற்காக சஞ்சய் தத் பணம் பெற்றார். ஆனால், படப்பிடிப்பை பாதியில் கைவிட்ட அவர், பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பி கொடுக்கும்படி, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிறப்பித்த உத்தரவையும் அவர் பின்பற்றவில்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
  இந்த வழக்கை திரும்பப் பெறும்படி சில நிழல் உலக தாதாக்களிடம் இருந்து எனக்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என்று ஷகீல் நூரானி குற்றம்சாட்டியுள்ளார்.
  இந்த மனு மீது நேரில் ஆஜராகி பதிலளிக்கும்படி, சஞ்சய் தத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் சனிக்கிழமை பிடியாணை பிறப்பித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai