சுடச்சுட

  

  சிறுபான்மையினர் நலனுக்கென தனி அமைச்சகம் தேவை: குஜராத்தில் கோரிக்கை

  By DIN  |   Published on : 16th April 2017 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலனுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
  குஜராத்தில் இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்த மதம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த சிலர் இணைந்து சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் குழுவை கடந்த ஆண்டு உருவாக்கினர்.
  அந்தக் குழு சிறுபான்மையினர் நலனுக்கென பிரத்யேக அமைச்சகத்தை மாநிலத்தில் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முஜாஹித் நஃபீஸ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  குஜராத் அரசில் சிறுபான்மையினர் நலனுக்கென தனி அமைச்சகம் இல்லை. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மேலும், சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படுவதில்லை.
  சிறுபான்மை இனத்தவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ஆணையமும் குஜராத்தில் இல்லை. எனவே, இங்கு சிறுபான்மையினர் நலனுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முதல்வர் விஜய் ரூபாணிக்கு சுமார் ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்ப உள்ளோம். அதில் சிறுபான்மையின மக்களின் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்படுவதுடன், சிறுபான்மையினர் குறைதீர் ஆணையம் அமைக்கவும் வலியுறுத்தப்படும்.
  மேலும், இதுதொடர்பான கோரிக்கை மனுவும் முதல்வரிடம் தனியாக அளிக்கப்படும் என்றார் முஜாஹித் நஃபீஸ்.
  குஜராத்தில் கடந்த 2011-இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அங்குள்ள சிறுபான்மையினர் எண்ணிக்கை 11.4 சதவீதமாகும். இதில், முஸ்லிம்களின் பங்கு 9.7 சதவீதம் ஆகும்; ஜைன சமூகத்தினர், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், பிற மதத்தினர் ஆகியோரின் பங்கு முறையே 1, 0.5, 0.1 மற்றும் 0.1 சதவீதம் ஆகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai