சுடச்சுட

  

  ஜாகிர் நாயக்கின் உதவியாளருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

  By DIN  |   Published on : 16th April 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Amir

  சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் உதவியாளர் ஆமிர் கஸ்தாருக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
  இதுகுறித்து அமலாக்கத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  ஜாகிர் நாயக்கின் உதவியாளர் ஆமிருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக அவரை அமலாக்கத் துறை கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி கைது செய்தது.
  இந்நிலையில், மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆமிருக்கு எதிராக அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 250 பக்கம் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், ஆமிர், ஜாகிர் நாயக்கின் சகோதரி, நாயக்கின் தொண்டு அமைப்பு கணக்காளர் உள்ளிட்ட 5 பேரின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன.
  இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, மும்பை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது குற்றப்பத்திரிகை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது என்று அமலாக்கத் துறை மூத்த அதிகாரி தெரிவித்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு, ஜாகிர் நாயக்குக்கு எதிராக மும்பை சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையைப் பிறப்பித்தது. முன்னதாக, ஜாகிர் நாயக் உள்ளிட்டோர் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு தனியே வழக்குப்பதிவு செய்தது.
  வங்கதேசத் தலைநகர் டாக்காவில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஒருவர், ஜாகிர் நாயக்கின் உரைகள் தனக்கு உத்வேகம் அளித்ததாக சமூகவலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இந்தியாவில் ஜாகிர் நாயக்கின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதையறிந்த அவர், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறி, சவூதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai