சுடச்சுட

    

    தெலங்கானா: முஸ்லிம்கள் இடஒதுக்கீடு அதிகரிப்பு மசோதா நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 16th April 2017 11:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெலங்கானாவில் முஸ்லிம்கள், பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா அந்த மாநில சட்டப் பேரவையில் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
    பாஜக தவிர பிற கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. தெலங்கானா சட்டப் பேரவை, மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா இனி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநில முதல்வர் கே. சந்திரசேகரராவ் பேரவையில் அறிவித்தார்.
    இந்தப் புதிய மசோதாவில் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு 4 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மாநிலத்தில் இதுவரை 50 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருந்தது. இப்போது இடஒதுக்கீடு 62 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக தெலுங்கானா பேரவையின் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏ-க்களும் கருப்புத் துண்டு அணிந்து, எதிர்ப்பு வாசக அட்டைகளுடன் அவைக்கு வந்தனர்.
    "மதரீதியாத இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்பதே அம்பேத்கரின் கருத்து. இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து, அவர்களை இடைநீக்கம் செய்வதாக பேரவைத் தலைவர் மதுசூதனாச்சாரி அறிவித்தார். எனினும், இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
    முன்னதாக, ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டப் பேரவையை நோக்கி பேரணி நடத்த முயன்ற பாஜக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
    ஹைதராபாதில் மட்டுமின்றி கரீம்நகர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai