சுடச்சுட

  

  தேர்தலில் தோற்றதற்காக வாக்கு இயந்திரங்களை சந்தேகிப்பதா?

  By DIN  |   Published on : 16th April 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amith sha

  "தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக, வாக்குப் பதிவு இயந்திரங்களை சந்தேகிப்பது, தேர்தல் ஆணையத்தை அவமதிப்பது போன்றதாகும்' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு, வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
  இதற்கு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
  தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக, வாக்குப் பதிவு இயந்திரங்களை சந்தேகிக்கக் கூடாது; அது, தேர்தல் ஆணையத்தை அவமதிப்பது போன்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
  மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்: இதனிடையே, வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தையும் இணைத்து பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
  இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில், நாட்டில் இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் மேற்கண்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்; அப்போதுதான், தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai