சுடச்சுட

  

  நடிப்புக்கான தேசிய விருதை பட்னவீஸ், தாக்கரேவுக்கு வழங்கலாம்: ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல்

  By DIN  |   Published on : 16th April 2017 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடிப்புக்கான தேசிய விருதை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸூக்கும், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் வழங்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல் கிண்டல் செய்துள்ளார்.

  இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், சிந்த்கேட்ராஜா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சிவசேனை ஆதரித்தது. இதனால், தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு, பிரதமர் நரேந்திர மோடியுடன் உணவருந்தவும் செய்தார்.
  எம்.பி.க்களின் பயணத்துக்கு விமான நிறுவனங்கள் தடை விதிக்கும் விவகாரத்தில், மக்களவையில் சிவசேனை கட்சி எம்.பி.க்கள் கடுமையாக விமர்சித்தனர். இதுபோன்று, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவசேனை கடுமையாகப் பேசியுள்ளதா?
  கடந்த வாரம், நடிப்புக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அப்போது, மும்பை மாநகராட்சித் தேர்தல் பிரசாரத்தில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் தெரிவிப்பது போன்று நடித்ததற்காக, ஃபட்னவீஸýக்கும், உத்தவ் தாக்கரேக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதை வழங்கியிருக்கலாம் என்று நினைத்தேன் என்றார் விக்கி பாட்டீல்.
  மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசிலும், மகாராஷ்டிர பாஜக அரசிலும் சிவசேனை அங்கம் வகிக்கிறது. இதனிடையே, பிருஹன் மும்பை மாநகராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், பாஜகவும், சிவசேனையும் தனித்துப் போட்டியிட்டன. அப்போது, ஃபட்னவீஸýம், உத்தவ் தாக்கரேவும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai