சுடச்சுட

  

  பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் தடுப்பதில் உளவு அமைப்புகள் தோல்வியடைந்து விட்டன: நாடாளுமன்றக் குழு

  By DIN  |   Published on : 16th April 2017 11:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதில் உளவு அமைப்புகள் தோல்வியடைந்து விட்டதாக நாடாளுமன்றக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
  இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
  பதான்கோட் விமானப் படைதளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், இன்னமும் இதுதொடர்பான விசாரணையை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்னமும் முடிக்கவில்லை.
  அதுபோல், பதான்கோட், உரி, பாம்போர், பாராமுல்லா மற்றும் நக்ரோட்டாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து நம்பகமான தகவல்களை அளிக்க முடியாமல் உளவு அமைப்புகள் தோல்வியடைந்தது குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. மேற்கண்ட தாக்குதல்கள், நமது உளவு அமைப்புகளில் குறைபாடுகள் இருப்பதை வெளிப்படுத்தி விட்டதாக இக்குழு கருதுகிறது.
  இந்நிலையில், மேற்கண்ட தாக்குதல்கள் குறித்து விசாரித்து வரும் என்ஐஏ அமைப்பை விரைந்து விசாரணையை நடத்தி முடிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் என்று இக்குழு பரிந்துரைக்கிறது. இந்த விசாரணை விரைந்து நடத்தி முடிக்கப்பட்டால்தான், எல்லைப் பகுதியில் நமது உளவு அமைப்புகளில் நிலவும் ஓட்டைகளை நம்மால் அடையாளம் காண முடியும்.
  இதேபோல், எல்லைப் பகுதிகள் வழியே நமது நாட்டுக்குள் ஊடுருவ நடைபெறும் முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, சுரங்கப் பாதை மூலம் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. எனவே, எல்லையில் சுரங்கப் பாதைகளை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
  இந்த வசதியை வைத்திருக்கும் பிற நாடுகளின் உதவியை அரசு கேட்க வேண்டும் என பரிந்துரை செய்கிறோம் என்று அந்த அறிக்கையில் நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai