சுடச்சுட

  

  பிகாரில் சிறை வாகனத்தின் மீது லாரி மோதல்: 7 போலீஸார், நக்ஸலைட் பலி

  By DIN  |   Published on : 16th April 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிகார் மாநிலம், சீதாமரி மாவட்டத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது லாரி மோதியதில் 7 போலீஸாரும், நக்ஸல் தீவிரவாதி ஒருவரும் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
  இதுதொடர்பாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆசிஷ் ஆனந்த் கூறியதாவது: பாகல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 நக்ஸல் தீவிரவாதிகளை சீதாமரீ மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை ஆஜர்படுத்த வேண்டியிருந்தது. இதனால், அதிகாலையில் அவர்கள் இருவரும் சிறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். உடன், 12 போலீஸாரும் சென்றனர்.
  சுமார் 5 மணியளவில், காய்கட் கிராமம் அருகே சென்றபோது சிறை வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில், வாகன ஓட்டுநர் உள்பட 4 போலீஸார் உயிரிழந்தனர்.
  எஞ்சியவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகிலிருந்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 3 போலீஸாரும், நக்ஸல் தீவிரவாதி ஒருவரும் வழியிலேயே உயிரிழந்தனர் என்றார் ஆசிஷ் ஆனந்த்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai