சுடச்சுட

  

  புதிய இந்தியாவை உருவாக்குவதில் வேகமாக முன்னேறி வருகிறோம்: பிரதமர் நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 16th April 2017 06:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  புவனேசுவர்: புதிய இந்தியாவை உருவாக்குவதில் வேகமாக முன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

  பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கியது.

  பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியமைப்பதே பாஜகவின் இலக்காகும். அதுகுறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் அதை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அதன் அடிப்படையில் தேர்தல் வியூகம் வகுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

  இந்நிலையில், இன்று 2-வது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசினார்.

  அப்போது அவர் பேசுகையில், புதிய இந்தியாவை உருவாக்குவதில் வேகமாக முன்னேறி வருகிறோம். முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாகவும் இதனை பொறுத்து கொள்ள முடியாது என்று கவலையுடன் பேசினார் மோடி.

  மேலும் புதிய இந்தியா உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும். பாஜகவின் வெற்றி களிப்பில் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. சர்ச்சை தரும் பேச்சை குறைத்து கடுமையாக உழைக்கும் மந்திரத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
  முத்தலாக் முறையிலான பாதிப்புகள் குறித்து நாம் மாவட்டம் வாரியாக எடுத்துச் சென்று விளக்கி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் நரேந்திர மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai