சுடச்சுட

  
  petrol

  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39-ம், டீசல் விலை ரூ.1. 04-ம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததாலும் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் 15 நாள்களுக்கு ஒரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன் அடிப்படையில், சனிக்கிழமை (ஏப். 15) அவற்றின் விலையை உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது.
  அதன்படி, நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு
  ரூ.1.39-ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.04-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
  உள்ளூர் வரிகளுடன் சேர்த்து மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விலை உயர்வு மாறுபடும்.
  கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.85-ம், டீசல் ரூ,3.41-ம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai