சுடச்சுட

  

  மகாநதி விவகாரத்தில் சத்தீஸ்கர் முதல்வர் கூறுவது தவறு: நவீன் பட்நாயக் பதிலடி

  By DIN  |   Published on : 16th April 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  naveen_patniak

  மகாநதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக சத்தீஸ்கர் முதல்வர் கூறியிருப்பது முற்றிலும் தவறு என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ù தரிவித்தார்.
  பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை புவனேசுவரம் வந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, மகாநதி நீர்ப் பங்கீட்டு விவகாரம் ஒரு பிரச்னையே கிடையாது என்றும் ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்குகின்றனர் எனவும் மறைமுகமாக நவீன் பட்நாயக்கை தாக்கிப் பேசினார்.
  இதற்கு பதிலடி தரும் வகையில், செய்தியாளர்களிடம் நவீன் பட்நாயக் பேசும்போது, ரமண் சிங்கின் கருத்து தவறானது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
  மகாநதி விவகாரத்தைத் தீர்ப்பதற்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தில்லியில் கூட்டத்தைக் கூட்டினார். ஆனால் ரமண் சிங் பிரச்னையைத் தீர்க்க ஒத்துழைப்பு தரவில்லை. இதுதான் உண்மை.
  பிரதமர் தனது கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே புவனேசுவரம் வந்திருக்கிறார். எனவே அவரை நான் சந்திக்க மாட்டேன். ஒடிஸாவில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை நடத்துவது கண்டு நான் கவலைப்படவில்லை என்றார் நவீன் பட்நாயக்.
  மகாநதி பிரச்னையே இல்லை: முன்னதாக, புவனேசுவரம் வந்தடைந்த ரமண் சிங், செய்தியாளர்களிடம் கூறியது:
  மகாநதி நீர்ப் பங்கீட்டில் பிரச்னையே இல்லை. ஒன்றுமில்லாத விவகாரத்தைத்தான் பிரச்னையாகக் காட்ட முயல்கின்றனர்.
  இது ஒடிஸா மக்களுக்கு நன்றாகத் தெரியும். மாநில கிராம ஊராட்சித் தேர்தலின்போதும் இதைப் பிரச்னையாக்க முயற்சி நடந்தது. இந்த விவகாரத்தை நவீன் பட்நாயக்குடன் விவாதிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
  ஊராட்சித் தேர்தலுக்குப் பிறகு ஒடிஸாவில் பாஜகவுக்கு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கிறது. மாநிலத்தில் 2019-இல் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று ஒடிஸாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றார் ரமண் சிங்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai