சுடச்சுட

  
  modicar

  ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தில் காரில் நின்றவாறே மக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர் மோடி.

  பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புவனேசுவரத்துக்கு விமானம் மூலம் சனிக்கிழமை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  அவரை, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜுவல் ஓராம், கட்சியின் மாநிலத் தலைவர்கள் வசந்த பாண்டா, விஜய் மொஹாபாத்ரா, கே.வி.சிங் தேவ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
  எனினும் அவரது வருகை அதிகாரபூர்வமற்றதும், அரசியல் சார்ந்த நிகழ்வும் என்பதால் விமான நிலையத்தில் நடந்த வரவேற்பில் முதல்வர் நவீன் பட்நாயக்கும் மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீரும் கலந்துகொள்ளவில்லை.
  ஆளுநர் மாளிகை வரையிலான 9 கி.மீ. தொலைவு சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று மோடிக்கு அன்பான வரவேற்பளித்தனர்.
  உற்சாகத்தில் தான் பயணித்த காரில் நின்றுகொண்டு கைகளை அசைத்தவாறே வந்தார். ஆளுநர் மாளிகையில் சுமார் 20 நிமிடங்கள் ஓய்வெடுத்த பிறகு கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறும் ஜனதா மைதானத்துக்கு மோடி புறப்பட்டுச் சென்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai