சுடச்சுட

  

  லாலு மகன்கள் மீது பாஜக ஊழல் புகார்: கருத்துக் கூற நிதீஷ் மறுப்பு

  By DIN  |   Published on : 16th April 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  book-release

  பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மகாத்மா காந்தியின் பிகார் பயணங்கள்' குறித்த நூல்களை வெளியிட்ட முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி

  பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதின் மகன்கள் மீதான நில மோசடி, மணல் விற்பனை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் நிதீஷ் குமார் கருத்து கூற மறுத்துவிட்டார்.

  பிகாரில் நிதீஷ் குமார் அமைச்சரவையில், துணை முதல்வராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவும், சுகாதாரத் துறை அமைச்சராக மூத்த மகன் தேஜ் பிரதாப்பும் உள்ளனர்.
  இவர்கள் இவரும் சட்ட விரோத மணல் விற்பனை, நில மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பதாகவும், இவர்கள் இருவரையும் நிதீஷ் குமார் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி வலியுறுத்தி வருகிறார்.
  இந்நிலையில், பாட்னா நகரில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முதல்வர் நிதீஷ் குமாரிடம், லாலு மகன்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
  அப்போது, செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த நிநீஷ் குமார், ""அதிகம் பேசினால் தொண்டைப் புண்ணாகி விடும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். உடன் வந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் பதிலளிக்கவில்லை.
  அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாநில கல்வித் துறை அமைச்சரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான அசோக் செளதரி, சுஷில் குமார் மோடியைக் கடுமையாகச் சாடினார்.
  ""ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தினந்தோறும் அறிக்கைகள் வெளியிடுவதைவிடுத்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் சுஷில் குமார் மோடி புகார் கொடுக்கலாம்'' என்று அவர் கூறினார்.
  இதனிடையே, பாட்னாவிலும், ஹரியாணாவிலும் தனக்குச் சொந்தமாக சொத்துகள் இருப்பதாகக் கூறிய ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுக்க இருப்பதாக சுஷில் குமார் மோடி சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai