சுடச்சுட

  

  2 அமைச்சர்கள் நியமனம்: சோனியா, ராகுலுடன் கர்நாடக முதல்வர் ஆலோசனை

  By DIN  |   Published on : 16th April 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
  கர்நாடக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நஞ்சன்கூடு, குண்டல்பேட் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தில்லிக்கு வெள்ளிக்கிழமை சென்ற முதல்வர் சித்தராமையா, அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இரு பேரவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றதற்காக முதல்வர் சித்தராமையாவுக்கு இரு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அமைச்சரவையில் காலியாக உள்ள 2 இடங்களில் யாரை நியமிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுதவிர, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிப்பது குறித்தும் சோனியா, ராகுலுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
  கட்சியின் மாநிலத் தலைவராக லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாட்டீலின் பெயரை முதல்வர் சித்தராமையா பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்ற கீதாமகாதேவபிரசாத்தை அமைச்சராக நியமிக்கவும் சித்தராமையா ஒப்புதல் கேட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அமைச்சரவையில் காலியாக உள்ள 2 இடங்கள், சட்டமேலவையில் காலியாக உள்ள 4 நியமன உறுப்பினர்கள் பதவி ஆகியவற்றை நிரப்புவதற்கு கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து கட்சி மேலிடம் விரைவில் முடிவெடுக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai