சுடச்சுட

  

  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேர், மகாராஷ்டிரத்தில் சுற்றுலா சென்றபோது சனிக்கிழமை கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
  கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள மராத்தா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 47 மாணவர்கள் மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வாய்ரி பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்குள்ள கடற்கரைக்குச் சென்ற அவர்களில் 30 பேர் நீச்சல் அடிப்பதற்காக கடலில் இறங்கினர். அப்போது அலைகளின் சீற்றம் திடீரென்று அதிகரித்தது. இதனால், நீச்சல் தெரியாத 8 மாணவர்கள் கடலில் மூழ்கி இறந்தனர். 19 பேர் நீச்சலடித்து உயிர் தப்பினர்.
  எனினும், அலையில் சிக்கிய மற்ற 3 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai