சுடச்சுட

  
  Gulam

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணி உருவாவதை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறினார்.
  உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெüவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ""மகா கூட்டணி அமைக்கும் யோசனை நல்ல விஷயம்'' என்றார்.
  எனினும், மகா கூட்டணி அமைப்பது முன்கூட்டியே கூறிவிட முடியாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: முதலில் மக்களின் உணர்வுகளுக்கும், கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அவர்களின் கருத்தை அறிய வேண்டும். இல்லாவிட்டால் மகா கூட்டணி அமைக்கும் முடிவு தவறாகிவிடும். இதுதொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசிப்போம்.
  ஆனால், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைப் போல், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடாது என்றார் அவர்.
  முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றிணையும் யோசனையை ஆதரிப்பதாக அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை கூறினார்.
  இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், பாஜகவுக்கு எதிராக மற்ற கட்சிகளுடன் கை கோப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
  எனினும், மாநிலத்தில் பேரவைத் தேர்தலுக்கு முன்பே சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால்தான் தங்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கருதுவதாக அக்கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai