சுடச்சுட

  

  உ.பி. தேர்தலில் சமாஜவாதி தோல்விக்கு ஊடகங்களும், வாக்காளர்களுமே காரணம்: முலாயம் சிங்

  By DIN  |   Published on : 17th April 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mulayalam_ssingh

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி தோல்வியடைந்ததற்கு, ஊடகங்களும், வாக்காளர்களுமே காரணம் என்று அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
  இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், இடாவாவில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் (அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி அரசு) சிறப்பாக பணியாற்றிய போதிலும், தேர்தலில் சமாஜவாதியை வாக்காளர்கள் தோற்கடித்து விட்டனர். பாஜகவால் முட்டாளாக்கப்பட்ட மக்கள், அக்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து விட்டனர்.
  சமாஜவாதி குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடு குறித்து செய்தி வெளியிடுவதற்குத்தான் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தன. சமாஜவாதி ஆட்சி காலத்தில் ஊடகங்கள் அராஜகத்துடன் நடந்திருக்கும்பட்சத்தில், பிற கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் அதுபோலவே நடக்க வேண்டும். உத்தரப் பிரதேச தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைமை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னைதான், கட்சியின் தோல்விக்கு காரணமா? என கேட்கிறீர்கள். என்னைப் பொருத்த வரையிலும், கட்சித் தலைவர் பதவி என்பது ஒரு பொருட்டே கிடையாது. சோசியலிஸ்ட் சித்தாந்தவாதிகளான ராம் மனோகர் லோகியா, ஜெயப் பிரகாஷ் நாராயண் ஆகியோர் எந்தப் பதவியை வகித்தனர்?
  எனது அடுத்தகட்ட நடவடிக்கை எதுவாக இருந்தாலும், அது கட்சி மற்றும் உத்தரப் பிரதேச மாநில மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும் என்று முலாயம் சிங் யாதவ் கூறினார்.
  இதனிடையே, உத்தரப் பிரதேச பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உத்தரப் பிரதேச மக்களின் அறிவு குறித்து முலாயம் சிங் கேள்வி எழுப்பியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  மேலும், தேர்தலில் சமாஜவாதி கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை முலாயம் சிங்கால் ஜீரணிக்க முடியவில்லை என்பதையே அவரது பேட்டி வெளிப்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai