சுடச்சுட

  

  உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு 51 பேரின் பெயர்களை பரிந்துரைத்தது கொலீஜியம்

  By DIN  |   Published on : 17th April 2017 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hammer-kZjD--621x414@LiveMint

  நாடு முழுவதும் 10 உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகள் பணியிடங்களுக்கு 51 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் தேர்வு குழு) பரிந்துரைத்துள்ளது.
  இதுகுறித்து உச்ச நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
  மும்பை, பஞ்சாப் மற்றும் ஹரியாணா, பாட்னா, ஹைதராபாத், தில்லி, சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கௌகாத்தி, சிக்கிம் ஆகிய 10 உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்காக 90 பேரின் பெயர் பட்டியலை உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு மாநில உயர் நீதிமன்ற கொலீஜியங்கள் அனுப்பி வைத்திருந்தன.
  இந்த 90 பேரின் பட்டியலில் இருந்து உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை தேர்வு செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடியது. இந்த கூட்டத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமை தாங்கினார். இதில் 51 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் இறுதி செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
  உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 51 பேரில், 20 பேர், நீதிமன்ற அதிகாரிகள். எஞ்சிய 31 பேரும் வழக்குரைஞர்கள் ஆவர்.
  உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரை மீது மத்திய அரசுதான் இனி அடுத்த முடிவெடுக்க வேண்டும். இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும்பட்சத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 51 பேரும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று உச்ச நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
  நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. இதன்காரணமாக, கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகள் மீதான விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் தீர்வு காணப்படாமல் தேங்கியுள்ளன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai