சுடச்சுட

  

  ஓபிசி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து: மோடிக்கு பாஜக தேசிய செயற்குழு பாராட்டு

  By DIN  |   Published on : 17th April 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்குவதற்கு சட்ட மசோதாவை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் பாஜக தேசிய செயற்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

  இதற்கான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் தடுக்க முட்டுக்கட்டை இடுவதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு கண்டனமும் வெளியிட்டுள்ளது அக்கட்சியின் செயற்குழு.
  இது குறித்து புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
  அரசியல் சாசன அந்தஸ்து கோரி ஓபிசி ஆணையம் கடந்த 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. வாக்கு வங்கி அரசியல் நடத்தி வந்த காங்கிரஸூக்கு இதைச் செய்ய மனமில்லை. இதைத் தொடர்ந்து அந்த ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க மோடி அரசு முடிவு செய்து மசோதாவைக் கொண்டு வந்தது. அந்த மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  ஆனால் தொடர்ந்து விவாதம் செய்ய வேண்டும் எனக் கூறி காங்கிரஸூம் மற்ற கட்சிகளும் அந்த மசோதாவை நிறைவேறவிடாமல் தடுத்துவிட்டன. தற்போது அந்த மசோதா அவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
  வளர்ச்சியை நோக்கிய கட்சியின் கொள்கைகளின் காரணமாக ஒடிஸா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஏழை மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.
  ஒரு காலத்தில் வறுமை ஒழிப்புத் திட்டம் காங்கிரஸூக்கும், இந்திரா காந்திக்கும்தான் சொந்தம் என அக்கட்சியினர் கொண்டாடினர்.
  ஆனால் அந்தத் திட்டம்தான் தற்போது பாஜகவின் அரசியல் கோட்பாடாகத் திகழ்கிறது என்றார் ஜாவடேகர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai