சுடச்சுட

  

  கருப்புப் பண பதுக்கல் குறித்து 38,000 மின்னஞ்சல்கள் நேரடி வரி விதிப்பு வாரியம் தகவல்

  By DIN  |   Published on : 17th April 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  email

  கருப்புப் பணப் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் துப்பு கொடுப்பதற்காக, மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இதுவரை 38,000 மின்னஞ்சல்கள் குவிந்துள்ளன.
  எனினும், அவற்றில் 6,050 மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து விசாரிக்குமாறு வருமான வரித் துறைக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, கருப்புப் பணப் பதுக்கல் குறித்து இடித்துரைப்பாளர்கள் துப்பு கொடுப்பதற்காக, மின்னஞ்சல் முகவரி ஒன்றை மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் அதியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
  அந்த முகவரிக்கு வந்துள்ள மின்னஞ்சல்கள் பற்றிய விவரங்களைக் கேட்டு மும்பையைச் சேர்ந்த ஜிதேந்திர கட்கே என்ற தகவல் பெறும் உரிமை ஆர்வலர், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திடம் (சிடிபிடி) விண்ணப்பித்திருந்தார். அவருடைய கோரிக்கைக்கு மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் கடந்த 7-ஆம் தேதி பதிலளித்திருந்தது.
  அதில், ""கருப்புப் பண பதுக்கல் தொடர்பாக, மொத்தம் 38,068 மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அவற்றில் 16 சதவீத மின்னஞ்சல்கள் அதாவது 6,050 மின்னஞ்சல் தகவல்கள் வருமான வரித் துறை இயக்குநருக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 32,018 மின்னஞ்சல் தகவல்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எத்தனை பொய்யான மின்னஞ்சல்கள் வந்துள்ளன? என்ற ஜிதேந்திர கட்கேவின் கேள்விக்கு, விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று சிடிபிடி பதிலளித்துள்ளது.
  இதுகுறித்து ஜிதேந்திர கட்கே, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 84 சதவீத துப்புகள் (மின்னஞ்சல்கள்) விசாரணையின்றி முடிக்கப்பட்டன. ஒருவேளை அந்த துப்புகள் அற்பமானதாக இருக்கலாம் அல்லது அந்தத் துப்புகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம் அல்லது கிடைத்திருக்கும் துப்புகள் அனைத்தையும் விசாரிக்கும் அளவுக்கு வருமான வரித் துறையில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் இல்லாமல் இருக்கலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai