சுடச்சுட

  

  கருப்புப் பண வழக்குகளை கையாள சிபிஐ-க்கு புதிய ஆன்லைன் அமைப்பு

  By DIN  |   Published on : 17th April 2017 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கருப்புப் பண வழக்குகளை கையாள்வதற்கு உதவியாக மத்திய புலனாய்வு (சிபிஐ) அமைப்புக்கு புதிய ஆன்லைன் அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
  இதுகுறித்து சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
  சட்ட விரோதமாக சொத்து சேர்ப்பு, கருப்புப் பண பதுக்கலுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளை கையாள்வதற்கு வசதியாக சிபிஐ-க்கு புதிய ஆன்லைன் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
  இந்தப் புதிய அமைப்பு மூலம், சிபிஐ விசாரணை அதிகாரிகள் கருப்பு பண பதுக்கல் தொடர்பான பலதரப்பட்ட தரவுகளை, வருமான வரித்துறை, வங்கி, நிதி புலனாய்வு பிரிவு (எப்ஐயு) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும்.
  ஆன்லைன் மூலம் கிடைக்கும் தகவல்கள் விஞ்ஞானப்பூர்வமான அடிப்படையில் நம்பகத்தன்மை கொண்டவை. மேலும், நவீன தகவல் தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி மறைக்கப்பட அனைத்து வருவாய் குறித்த தகவல்களையும் வெளிக்கொணர விசாரணை அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் வழக்குகள் அனைத்தும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 673 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 1,300 அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai