சுடச்சுட

    

    காஷ்மீர்: பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

    By DIN  |   Published on : 17th April 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இரு வேறு இடத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் வழக்குரைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    சோஃபியான் மாவட்டம், பிஞ்சூரா என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுவிட்டு வெளியே வந்த வழக்குரைஞர் இம்தியாஸ் அகமது கானை பயங்கரவாதிகள் திடீரென சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
    இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    இம்தியாஸ் அகமது கான் அந்த மாநில எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்.
    இதனிடையே, பந்திபோரா மாவட்டம், ஹஜ்ஜன் பகுதியில் வசித்துவந்த அப்துல் ரஷீத் பர்ரே என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இவர் முன்பு பயங்கரவாத இயக்கத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், ஒருவர் காயமடைந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai