சுடச்சுட

  
  Pranab

  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பாட்னாவுக்கு வருகை தர உள்ளார்.
  இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  பிகார் மாநிலம், சம்பாரண் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மகாத்மா காந்தி கடந்த 1917-ஆம் ஆண்டு முதன்முறையாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  மேலும், ஆங்கிலேய அரசுக்கு எதிராக காந்தி பங்கேற்ற முதல் கிளர்ச்சியும் இதுவேயாகும். முன்னதாக, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அவர் சம்பாரண் பகுதிக்கு வந்தார்.
  சம்பாரண் சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
  இதையொட்டி, பாட்னாவில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். அப்போது, விடுதலைப் போராட்ட வீரர்களை அவர் கௌரவிப்பார்.
  காந்தியின் வாழ்க்கையில் பாட்னா பல வகையில் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai