சுடச்சுட

  

  குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் மெளனம்

  By DIN  |   Published on : 17th April 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, ராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உத்தரவு ஆகியவற்றின் நகல்களை வழங்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கைக்கு பாகிஸ்தானிடமிருந்து இதுவரை பதிலில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
  பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலர் தெஹ்மினா ஜஞ்சுவாவை இந்தியத் தூதர் கெளதம் பம்பாவாலே வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
  அப்போது, குல்பூஷண் ஜாதவுக்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, ராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உத்தரவு ஆகியவற்றின் சான்றிடப்பட்ட நகல்களை வழங்குமாறு தெஹ்மினாவிடம் கெளதம் பம்பாவாலே கோரினார். எனினும், இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்றார் அவர். பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ்(46) தங்கள் நாட்டில் வேவு பார்த்ததாகவும், பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டதாகவும் கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு அண்மையில் தூக்கு தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்று கூறிய இந்தியா, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai