சுடச்சுட

  

  கேரளத்தின் அரிய மழைக்காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றினார் இந்திரா

  By DIN  |   Published on : 17th April 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vbk-jairam_ramesh

  கேரள மாநிலத்தின் அமைதிப் பள்ளத்தாக்கில் நீர் மின் நிலையம் அமைக்க அரசியல் சக்திகள் வலியுறுத்தியும், அதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் தனித்துவம் வாய்ந்த மழைக்காடுகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காப்பாற்றியதாக விரைவில் வெளிவரவுள்ள புதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷால் எழுதப்பட்டுள்ள "இந்திரா காந்தி: எ லைஃப் இன் நேச்சர்' என்ற அந்தப் புத்தகம், வரும் ஜூன் மாதம் 10-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
  அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அமைதிப் பள்ளத்தாக்கு வழியாக பாயும் குந்திபுழா ஆற்றிலிருந்து நீர் மின்சாரம் எடுக்கும் திட்டத்தை கேரள மாநில மின் வாரியம் பரிந்துரைத்தது.
  பாலக்காடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, இந்தத் திட்டம் மிகவும் இன்றியமையாதது என்று காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருதின. அந்தத் திட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு சக்திகளும் ஒன்று திரண்டன. சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் மட்டும் தன்னந்தனியாக இந்தத் திட்டத்தை எதிர்த்து தனியாகப் போராடினர்.
  இந்த நீர் மின் நிலையத் திட்டத்துக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், இதுகுறித்து முடிவெடுக்க 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இந்திரா காந்தி, இறுதியில் அந்த திட்டத்தை நிராகரித்தார். இதனால், அழியும் நிலையில் உள்ள சிங்கவால் குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும், தனித்துவம் வாய்ந்த மழைக்காடுகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டன என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "சுற்றுச்சூழல் போராட்ட வரலாற்றில் சிப்கோ இயக்கத்துக்குப் பிறகு, அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து அரசியல் சக்திகளையும் எதிர்த்து, வலிமையற்ற அந்தச் சுற்றுச்சூழல் இயக்கம் வெற்றி பெற்றது மிகப் பெரிய சாதனை' என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai