சுடச்சுட

  

  சமூக வலைதளங்களில் அரசை தவறாக விமர்சித்தால் சிறை: ஆந்திர அரசு

  By DIN  |   Published on : 17th April 2017 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Andhra_government

  சமூக வலைதளங்களில் அரசை தவறாக விமர்சிப்பவர்களுக்கு அதிகபட்சமாக சிறைத் தண்டனை விதிக்கும் அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆந்திர தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கூறியுள்ளார்.
  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ் அண்மையில்தான் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமெரிக்காவில் படித்த அவரால், பதவியேற்பின்போது சில தெலுங்கு வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதனை கேலி செய்தும், பொதுக் கூட்டத்தில் தவறாக அவர் பேசியதை கிண்டல் செய்தும் முகநூல் (ஃபேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.
  முக்கியமாக, தங்கள் கட்சியின் சின்னமான சைக்கிளுக்கு வாக்களிப்பது தூக்கில் தொங்குவதற்கு சமம் என்றும், ஜாதி, மதம் மற்றும் ஊழலை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது தங்கள் கட்சி மட்டும்தான் என்றும் நாரா லோகேஷ் தெலுங்கில் தவறாகப் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
  இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆந்திர அரசு, முதல்வர், அமைச்சர்களைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் குறித்து போலீஸில் புகார் அளித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்சியினருக்கும், சக அமைச்சர்களுக்கும் நாரா லோகேஷ் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவர் நடத்தினார். அதில், "முக்கிய ஊடகங்கள் அனைத்தும் நமது அரசின் நடவடிக்கைகள் குறித்து சிறப்பாக செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஆனால், சமூக வலைதளங்களில்தான் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன' என்று குறிப்பிட்டார்.
  இது தொடர்பாக மாநில பொதுமக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கல்வா ஸ்ரீநிவாசலு கூறியதாவது:
  தங்கள் கருத்தை வெளியிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது மற்றவர்களைப் பற்றிய அவதூறாக இருக்கக் கூடாது. கட்டுப்பாடு இல்லாமல் வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே மாநிலப் பேரவையில் விவாதித்துள்ளோம்.
  சமூக வலைதளங்களில் அரசையும், அமைச்சர்களையும் தவறாக விமர்சித்தால் அவர்கள் மீது புகார் அளித்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது லோகேஷ் முன்வைத்த யோசனை அல்ல என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai