சுடச்சுட

  

  சுஷில் குமார் மோடியின் ஊழல் குற்றச்சாட்டை நிராகரித்த லாலு

  By DIN  |   Published on : 17th April 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Lalu32

  நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை பிகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி முன்வைத்து வருகிறார் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசார் யாதவ் தெரிவித்தார்.

  பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், தனது மகனுமான தேஜ் பிரதாப் யாதவின் 28-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியில் லாலு பிரசாத் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.
  பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  பிகார் மாநில பாஜகவில் இருந்து சுஷில் குமார் மோடி தற்போது ஓரம்கட்டப்பட்டு விட்டார். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களிடையே அவர் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்றார் லாலு பிரசாத்.
  முன்னதாக, பாட்னாவில் சில முக்கியமான பகுதிகளில் உள்ள நிலங்களை போலி நிறுவனங்கள் மூலம் தனது பெயருக்கும், குடும்பத்தினர் பெயருக்கும் லாலு பிரசாத் மாற்றிக் கொண்டார் என்று சுஷில் குமார் மோடி குற்றம்சாட்டினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai