சுடச்சுட

  

  ஜன் தன் வங்கி கணக்குகளில் ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வார காலத்தில் மட்டும் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜன் தன் வங்கி கணக்குகளில் அதிக அளவிலான தொகையை வாடிக்கையாளர்கள் திரும்பப்பெற்று வந்த நிலையில் தற்போது முதல் முறையாக கணிசமான தொகையை அந்த வங்கிக் கணக்குகளில் டெபாசிட் மேற்கொண்டுள்ளனர்.
  இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாமானிய மக்களும் வங்கிச் சேவையை பெறும் வகையில் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. அத்தகைய கணக்குகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக ரூ.74,610 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அதன்பின்பு, ஜன் தன் வாடிக்கையாளர்கள் கணிசமான தொகையை திரும்பப் பெற்று வந்தனர். இந்த நிலையில், மார்ச் 29-ஆம் தேதி ஜன் தன் கணக்குகளில் நிகர அளவில் இருப்புத் தொகையாக ரூ.62,972.42 கோடி காணப்பட்டது. அதற்கு பிறகு ஒரே வாரத்தில் அந்த வங்கிக் கணக்குகளில் இருப்பு 63,971.38 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒருவார கால அளவில் மட்டும் ரூ.1,000 கோடியை வாடிக்கையாளர்கள் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளனர். வார அளவில் அத்தகைய வங்கி கணக்குகளில் இந்த அளவுக்கு டெபாசிட் செய்யப்படுவது இதுவே முதல் முறை. அதேபோன்று ஜன் தன் திட்டத்தில் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையும் 28.23 கோடியாக உயர்ந்துள்ளது. அதில், 18.50 கோடி கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai