சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் வரும் 25-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குழு தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய, மாநில அரசுகள் உறுதியளிக்கும் வரை தில்லி ஜந்தர் மந்தர் பகுதியை விட்டுச் செல்ல மாட்டோம். வரும் 22-ஆம் தேதி விவசாயிகள் பிரச்னையை விளக்கி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.
  வரும் 25-ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக தலைமையில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் எங்கள் சங்கம் ஆதரவளிக்கும். இந்தப் போராட்டத்துக்கு, தமிழகத்தில் ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக ஆகியவையும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் அய்யாக்கண்ணு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai