சுடச்சுட

  

  ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசும்

  By DIN  |   Published on : 17th April 2017 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி: ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, அந்தத் துறையின் அதிகாரிகள் கூறியதாவது:
  பாகிஸ்தான் மற்றும் மேற்கு ராஜஸ்தானையொட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களில் கடுமையான அனல் காற்று வீசும். இதேபோல் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான அனல் காற்று வீசும்.
  மேலும் ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில்  அனல் காற்று வீசும்.
  அஸ்ஸாம், மேகாலயம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 3 நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai