சுடச்சுட

  

  ஹரியாணா: தூக்கிட்டுத் தற்கொலை செய்வதை முகநூலில் நேரலையாகப் பதிவு செய்த இளைஞர்

  By DIN  |   Published on : 17th April 2017 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்வதை முகநூல் வலைதளத்தில் நேரலையாகப் பதிவு செய்தார்.
  இதுகுறித்து, சோனிபட் காவல்துறை கண்காணிப்பாளர் அஷ்வின் ஷேன்வி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
  சோனிபட்டில் வசித்து வந்தவர் தீபக் (32). இவர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதை, அவர் தனது முகநூல் பக்கத்தில் நேரலையாகப் பதிவு செய்தார்.
  முன்னதாக, தனது தற்கொலைக்கான காரணத்தை அங்கிருந்த சுவரில் அவர் எழுதியுள்ளார். அதில், அந்தப் பகுதியில் வாழும் திருமணமான பெண்ணும், அவருடன் தவறான தொடர்பில் இருப்பவரும் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
  அந்தப் பெண், தில்லி காவல் துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஹரியாணா காவல் துறையில் பணியாற்றுகிறார். இதனிடையே அந்தப் பெண் தில்லி காவல் துறையில் பணியாற்றும் ஆய்வாளர் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்த தீபக், அந்தப் பெண்ணின் கணவரிடம் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார். தீபக் தங்களைக் காட்டிக் கொடுத்து விட்டதை அறிந்த அந்தப் பெண்ணும், அவருடைய காதலரும் தீபக்கை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
  இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.
  இதுதொடர்பாக, தீபக்கின் குடும்பத்தார் அளித்த புகாரின்பேரில் அந்தப் பெண் மற்றும் அவருடைய காதலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம் என்றார் அஷ்வின் ஷேன்வி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai