சுடச்சுட

  

  வரும் 2019}ஆம் ஆண்டின் மத்தியில் அமையவிருக்கும் அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடியே தலைமை தாங்கும் வகையில் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

  இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியது:
  அனைவருக்குமான நலத் திட்டங்கள், மேம்பாட்டு உதவிகள் தொடரும் நோக்கில் வரும் 2019}ஆம் ஆண்டிலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசை ஏற்படுத்த ஆதரவளிக்க வேண்டும் என்று நாட்டு மக்களை பாஜக கேட்டுக்கொள்கிறது. இதற்காக மக்களின் நம்பிக்கை பெறும் வகையில் கட்சித் தொண்டர்கள் பாடுபட உறுதியேற்க வேண்டும்.
  கடந்த 3 ஆண்டுகளாக மோடி தலைமையிலான ஆட்சி காரணமாக நீடித்த பொருளாதார மேம்பாட்டை நோக்கி இந்தியா வேகமாக பயணித்து வருகிறது.
  இந்தியாவை தன்னிறைவு, தன்னம்பிக்கை, முற்போக்கு கொண்ட நாடாக மாற்றியமைக்க மக்கள் நலன் சார்ந்த அதே நேரத்தில் திடமான முடிவுகள், கொள்கைகளை மோடி அரசு கடைப்பிடித்து வருகிறது. மத்திய அரசின் செயல் திட்டங்களால்தான் சாமானியர்கள் மத்தியில் மோடி மீதான நம்பிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
  மோடி அரசின் கொள்கைகள், முடிவுகளின் எதிரொலியாக உலக அரங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் முற்போக்கான நாடாக இந்தியா திகழ்கிறது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மோடி அரசு விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறது.
  மத்திய அரசால் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில் பெரும்பாலானவை சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பலன் அளிக்கும் இலக்கைக் கொண்டவை. இதனால்தான் லட்சக்கணக்கான சாமானியர்களின் மத்தியில் மோடி அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல்களில் வாக்காளர்கள் பாஜகவுக்கு பெரும் ஆதரவை அளித்தது இதற்கு எடுத்துக்காட்டு.
  நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றவும் அனைத்துத் துறைகளிலும் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு நிதிநிலை அறிக்கையில் ஓர் ஒழுங்கைக் கொண்டு வரவும் மத்திய அரசு மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகளை தீர்மானம் பாராட்டுகிறது.
  மோடி பணியாற்றும் நேர்த்தி, பொது நலன் குறித்த அவரது கொள்கைகள், திடமான நம்பிக்கை மற்றும் தலைமைப் பண்பு உள்ளிட்ட அவரது திறன்களும் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டும் இருக்கின்றன என அந்த தீர்மானத்தில் சுட்டிக் காட்டியிருப்பதாக ஜாவடேகர் கூறினார்.
  எனினும் ராமர் கோயில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370, சீரான குடிமையியல் கோட்பாடுகள் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக தீர்மானத்தில் எதுவும் கூறப்படவில்லை. மேலும் பசு வதைத் தடை விவகாரமும் விவாதிக்கப்படவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai