சுடச்சுட

    

    அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கும் காட்சியை மக்கள் விடியோ எடுக்க வேண்டும்: உ.பி. அமைச்சர்

    By DIN  |   Published on : 18th April 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கும்பட்சத்தில், அந்தக் காட்சியை பொதுமக்கள் விடியோவாக எடுக்க வேண்டும் என்று அந்த மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.
    இதுகுறித்து மதுராவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
    அரசு அதிகாரிகள் யாரேனும், தங்களது பணிகளுக்காக மக்களிடம் லஞ்சம் கேட்டால், அந்தக் காட்சியை பொதுமக்கள் விடியோவாக எடுக்க வேண்டும். அதன்மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். உத்தரப் பிரதேசத்தில் லஞ்சத்தை முழுவதும் அகற்றவும், மாநிலத்தில் வளர்ச்சியை உறுதி செய்யவும், மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு சன்னியாசியை (யோகி ஆதித்யநாத்தை) பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தார். இது வெறும் முன்னோட்டக் காட்சிதான். இனிமேல்தான் முக்கியக் காட்சி வரவுள்ளது.
    மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்கும் வகையில், பசு வதைக்கு அரசு தடைவிதித்துள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்வதுதான் முதல்வர் ஆதித்யநாத்தின் லட்சியமாகும் என்றார் ஸ்ரீகாந்த் சர்மா. நிகழ்ச்சியில் மற்றோர் அமைச்சர் லட்சுமி நாராயண் சௌதுரி பேசியபோது, உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 'யமுனை நதியை சுத்தப்படுத்துவது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன; யமுனையில் நீர் இடையூறின்றி செல்வதை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai